ரேர்ஜாப் தலைமை நிர்வாக அதிகாரி காகு நகாமுராவுடன் மல்டிபாஷி குழு

ஜப்பானில் பட்டியலிடப்பட்டுள்ள முன்னணி ஆன்லைன் ஆங்கில கற்றல் நிறுவனங்களில் ஒன்றான ரேர்ஜாப் இன்க் இன் முதலீட்டாளர்கள் குழுவிலிருந்து கிடைத்துள்ள சமீபத்திய முதலீட்டை பற்றி மல்டிபாஷி மிகவும் மகிழ்ச்சியுடன் அறிவிக்கிறது.
புதிய மொழியை திறமையாக கற்க விரும்பும் பயனர்களுக்கு உதவ வேண்டும் என்ற ஒரே நோக்கத்துடன் 2 ஆண்டுகளுக்கு முன்பு மல்டிபாஷி நிறுவப்பட்டது. தற்போது 1.5 மில்லியனுக்கும் அதிகமான மல்டிபாஷி பயனர்கள் உள்ளனர் என்பது இந்த நிறுவனத்திற்கு கிடைத்த வெற்றியாகவே பார்க்கப்படுகிறது. இந்த ஸ்டார்ட்-அப் நிறுவனமான மல்டிபாஷி, தொடக்க நிறுவனங்களை அதன் வளர்ச்சியை ஊக்குவிக்கும் பொருட்டு, அதன் செயல்திறன் மற்றும் பங்களிப்பை உற்று நோக்கி பல புகழ்பெற்ற ஸ்டார்ட்-அப் ஆக்சிலரேட்டர்கள் அதன் வளர்ச்சிக்கு உதவுவதுண்டு. அந்த வகையில் எஃப்.பி.ஸ்டார்ட், ஆக்ஸிலர், கிரே மேட்டர்ஸ் கேபிடல், ஏ.டபிள்யூ.எஸ் எடுஸ்டார்ட் மற்றும் கூகிள் லாஞ்ச்பேட் போன்றவற்றால் மல்டிபாஷி தேர்வு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
11 க்கும் மேற்பட்ட மொழிகள் (ஆங்கிலம், கன்னடம், தமிழ், மலையாளம், தெலுங்கு, மராத்தி, பஞ்சாபி, குஜராத்தி, ஒரியா, பங்களா, இந்தி போன்றவை) மூலம் மல்டிபாஷி ஆங்கிலத்தை கற்பிக்கிறது. சுமார் 27,000 பயனர்களுடன் கூகிள் பிளே ஸ்டோரில் ரேட்டிங் 5 இல் 4.4 மதிப்பீட்டைக் கொண்டு, இது கற்பித்தல் / கற்றலுக்கான சிறந்த மதிப்பிடப்பட்ட ஆப்-களில் ஒன்றாக திகழ்கிறது. சாட்பாட் மற்றும் வாய்ஸ்பாட் சிறப்பம்சங்களை கொண்டு விளங்கும் பிளே ஸ்டோரில் கிடைக்கும் ஒரு சில கற்றல் பயன்பாடுகளில் இது கற்றல் செயல்முறையை இன்னும் சிறப்பாக மேம்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. கம்யூனிட்டி அம்சங்கள் போன்ற வேறு சில அம்சங்கள் ஆப்-ல் ஒரே மொழி கற்பவர்களை கண்டறிந்து அவர்களை ஒருங்கிணைத்து கற்றலை ஊக்குவிக்கின்றது. பிரீமியம் வகுப்புகள் வாயிலாக நிறுவனத்தில் பணிபுரியும் கற்பிக்கும் ஆசிரியர்களிடமிருந்து எந்நேரமும் லைவ் சப்போர்ட்டை மல்டிபாஷி வழங்குகிறது.

இந்தியாவின் 460 மில்லியன் ப்ளு மற்றும் க்ரே காலர் தொழில் வல்லுநர்கள், தங்கள் தொழில் வாழ்க்கையில் தகவல்தொடர்பிற்காக ஆங்கிலத்தை பயன்படுத்தி அவர்கள் தொழிலில் மென்மேலும் வளர்ந்திட மற்றும் வாழ்க்கையில் சிறந்து விளங்குவதை மல்டிபாஷி நேர்மறை குறிக்கோளாகக் கொண்டுள்ளது.
இதன் முக்கியத்துவத்தின் அவசியத்தை மையமாகக் கொண்டு, மல்டிபாஷி தயாரிப்புகள் இரு மொழி பயிற்சியின் மூலம் (11 இந்திய மொழிகள் மூலம் ஆங்கிலம் கற்பித்தல்), பணியிட சூழ்நிலைப்படுத்தல் மற்றும் மெய்நிகர் ஆசிரியர் கல்வியை வலியுறுத்துகின்றன.
“எடுத்துக்கொண்டுள்ள இப்பெருமுயற்சிக்கு உண்மையாக விளங்கிடும் பொருட்டு அணியை தொடர்ந்து வலுப்படுத்தவும், தயாரிப்புகளை மேம்படுத்தவும், சந்தையில் இன்னும் ஆழமாக நுழையவும் இந்த முதலீட்டை நாங்கள் பெற்றுள்ளோம்” என்று மல்டிபாஷி நிறுவனர் அனுராதா அகர்வால் கூறினார். மல்டிபாஷியின் ஒரே குறிக்கோளாக மில்லியன் கணக்கான இந்தியர்களை அவர்களின் ஆங்கிலம் பேசும் திறமையை வளர்த்து உலகளவில் போட்டித்தன்மையடையச் செய்வதே ஆகும். மல்டிபாஷியின் குறிக்கோளைப் போலவே ஜப்பானின் ரேர்ஜாப் நிறுவனத்தின் குறிக்கோளும் ஒத்துள்ளதால் இரண்டு வெவ்வேறு நாட்டின் சந்தைகளில் இந்த இரு நிறுவனமும் ஒருவருக்கொருவர் கற்றுக்கொள்ளும் நோக்குடன் இந்த முதலீடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மல்டிபாஷி நிறுவனர் அனுராதா அகர்வாலுடன் ரேர்ஜாப் தலைமை நிர்வாக அதிகாரி காகு நகாமுரா
மல்டிபாஷி போன்ற ஒரு புதிய ஸ்டார்ட்-அப் நிறுவனத்திற்கு ரேர்ஜாப்பின் கதை மிகவும் ஊக்கமளிக்கிறது, மேலும் அவர்களின் தயாரிப்பு மற்றும் குழுவை ஒரு போட்டி சந்தையில் உயர் நிலைக்கு கொண்டு சென்ற அந்த அனுபவத்திலிருந்து நாங்கள் கற்றுக்கொள்ள முயற்சிப்போம்.
“அனைவருக்கும், அனைத்து இடங்களிலும் வாய்ப்பு” என்ற நிறுவனத்தின் தொலைநோக்கு பார்வையுடன், ரியர்ஜோப் உலகெங்கிலும் உள்ள மக்களுக்கு ஒரு தளத்தை உருவாக்குவதையும், 10 மில்லியன் ஜப்பானியர்களுக்கு ஆங்கிலம் கற்க முயற்சிக்ப்பதையும் தங்கள் நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்நிறுவனம் 2007 ஆம் ஆண்டில் ஒரு சிறிய ஸ்டார்ட்-அப் நிறுவனமாக தனது பாதையைத் தொடங்கியது, விரைவில் 2014 ஆம் ஆண்டில் பப்ளிக் லிஸ்டட் நிறுவனமாக மாறி புதிய உயரங்களை எட்டியது.
“இந்திய ஆங்கில கல்வி முறைமையில் உள்ள கற்பிப்பாளர்களை பார்த்தபோது, அவர்களில் பெரும்பாலானோர் இன்டர்நெட்டில் அல்லாத பழைய முறையை பின்பற்றி நேருக்கு நேர் வகுப்புகள் மூலம் ஆங்கிலம் கற்றுத்தருபவர்களாகவும், அவை கற்பவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இல்லை அல்லது இறுதி நுகர்வோருக்கு மிகவும் மலிவானவையாக இல்லை என்பதும் கண்டறியப்பட்டது; மறுபக்கம் ஆன்-லைன் கல்வியலாளர்களில் சுய கற்றல், கேம் மற்றும் மற்றவைகளில் மட்டுமே அதிக கவனம் செலுத்தும் வகையில் அவர்களது பயன்பாடுகள் உள்ளன. இந்த மாறுபட்ட கல்வியலாளர்களில், மல்டிபாஷி கற்றல் விளைவுகளில் அதன் அசைக்க முடியாத கவனத்தை சுய கற்றல் மற்றும் ஆசிரியர் தலைமையிலான கற்றல் ஆகியவற்றின் மூலம் உண்மையான கற்றல் விளைவுகளை வழங்குவதற்கான ஒரு தனித்துவமான மாதிரியுடன் விளங்குகிறது ”என்று ரேர்ஜாப்பின் தலைமை நிர்வாக அதிகாரி காகு நகாமுரா கூறுகையில்,கூறினார்.
“ஆங்கிலம் அனைத்து ஆர்வமுள்ள இந்தியர்களுக்கும், குறிப்பாக ப்ளூ மற்றும் க்ரே காலர் தொழிலாளர்களுக்கும் ஒரு லட்சிய இலக்கு, ஆங்கிலத்தில் தேர்ச்சி பெறுவது அவர்களுக்கு ஒரு சிறந்த வேலையைப் பெற உதவும் என்பதை அவர்கள் நன்கு அறிவார்கள். தொழில்நுட்பம் மற்றும் ஆசிரியர்களின் பயிற்சி என்ற திறமையான கலவையைப் பயன்படுத்தி மல்டிபாஷி ஆங்கிலம் கற்கும் ஒவ்வொருவரது சிக்கலையும் தீர்க்கிறது. இந்தியாவில் மட்டுமல்லாது, உலகம் முழுவதிலும் உள்ள இது ஒரு பெரிய சந்தை – . நான் 2 ஆண்டுகளுக்கு முன்பு மல்டிபாஷியில் முதலீடு செய்தபோது, அவர்களிடம் 1 லட்சம் பயனர்கள் மட்டுமே இருந்தனர். சந்தையில் உற்பத்தியைக் காண்பிப்பதற்காக அவர்கள் மூலதனத்தை திறமையாகப் பயன்படுத்தினர். நிறுவனத்தின் எதிர்காலம் மற்றும் வரவிருக்கும் நாட்களில் அது அடையப்போகும் வெற்றியை குறித்தும் நான் உற்சாகமாக உள்ளேன் , ஏனென்றால் அவர்களது குறைந்த கட்டணங்கள் மற்றும் கடின உழைப்பின் மூலம் அவர்கள் வெற்றி பெற உரிமை உண்டு என்பதை நிரூபித்துள்ளனர் தற்போதைய மல்டிபாஷி முதலீட்டாளர் டாக்டர் அனிருதா மால்பானி கூறினார்.
ஸ்டார்ட் அப் நிறுவன நடவடிக்கைகளுக்கு இந்திய மொழியியல் துறை மிகவும் பயனுள்ள இடமாகும், மேலும் இந்தத் துறையின் முக்கிய தேவைகளில் ஒன்று ஆங்கிலக் கல்வி. நன்கு வரையறுக்கப்பட்ட தயாரிப்பு வியூகங்கள் மற்றும் உற்சாகமான குழுவுடன், இந்த சவாலைத் தீர்க்கவும், இந்த மிகப்பெரிய வாய்ப்பை பயன்படுத்தவும் மல்டிபாஷி சரியான பாதையில் செல்கிறது.